ஆன்லைனில் சிறார் பாலியல் வன்கொடுமையையும் முறைகேடுகளையும் எதிர்க்க நாங்கள் அதிகம் முயல்கிறோம், மேலும் எங்கள் தளங்களில் தகாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் கண்டறியவும் அகற்றவும் புகாரளிக்கவும் எங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

NGOக்களோடும் தொழில்துறையோடும் இணைந்து எங்கள் தொழில்நுட்பத் திறனை அவர்களோடு பகிர்ந்து நிறுவனங்கள் CSAMமை எதிர்ப்பதற்கு உதவ கருவிகளையும் உருவாக்கிப் பகிரும் வகையில் திட்டங்களை நடத்துகிறோம்.

சிறுவர் பாதுகாப்புக் கருவித்தொகுப்பு குறித்து இங்கு மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

எங்கள் தளங்களிலும் சேவைகளிலும் தகாத உள்ளடக்கத்தை எதிர்த்தல்

Google நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்தே எங்கள் சேவைகளில் சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் தவறாக வழிநடத்துதல் சார்ந்த உள்ளடக்கத்தை முனைப்போடு எதிர்த்து வருகிறோம். சிறார் பாலியல் முறைகேடு சார்ந்த உள்ளடக்கத்தையும் நடத்தையையும் தடுக்கவும், கண்டறியவும், அகற்றவும், புகாரளிக்கவும் குறிப்பிடத்தக்க அளவில் தொழில்நுட்பத்தையும், மனித உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து வருகிறோம்.

நாங்கள் என்ன செய்கிறோம்?

தவறான பயன்பாட்டைத் தடுத்தல்

தவறான பயன்பாட்டைத் தடுத்தல்


எங்களது தயாரிப்புகள் சிறுவர்கள் பயன்படுத்தப் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்வதன் மூலம் தவறான பயன்பாட்டைத் தடுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். கிடைக்கக்கூடிய அனைத்து புள்ளிவிவரங்களையும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி, வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களையும் புண்படுத்தப்படுவதற்கான புதிய வழிகளையும் நாங்கள் அறிந்துகொள்கிறோம். சட்டவிரோதமான CSAMமிற்கு எதிராக மட்டுமின்றி சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவதை ஊக்குவித்து அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் பரந்தளவிலான உள்ளடக்கத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

கண்டறிதலும் புகாரளித்தலும்

கண்டறிதலும் புகாரளித்தலும்


பயிற்சிபெற்ற நிபுணர் குழுக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் CSAMமை அடையாளம் கண்டு புகாரளிக்கிறோம். ஏற்கெனவே CSAMமாக அறியப்பட்டவற்றின் ஹேஷ்களுடன் ஒப்பிடுவதற்கென படத்திற்கோ வீடியோவிற்கோ தனிப்பட்ட டிஜிட்டல் கைரேகை அல்லது ஹேஷை உருவாக்கும் ஹேஷ்-மேட்சிங் தொழில்நுட்பமும் மெஷின் லேர்னிங் வகைப்படுத்தியும் இந்தத் தொழில்நுட்பத்தில் அடங்கும். CSAMமைக் கண்டறிந்தால் உலகம் முழுவதும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் நேஷனல் சென்ட்டர் ஃபார் மிஸ்ஸிங் & எக்ஸ்ப்ளாய்டெட் சில்ட்ரன் (NCMEC) என்ற அமைப்பிடம் புகாரளிப்போம்.

உலகம் முழுவதும் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல்

உலகம் முழுவதும் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல்


சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கும் முயற்சிகளில் NCMEC மற்றும் உலகம் முழுவதுமுள்ள பிற அமைப்புகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். இந்த முயற்சிகளின் பகுதியாக, வளர்ந்துவரும் NGOக்களுடனும் தொழில்துறை அமைப்புகளுடனும் உறுதியான முறையில் இணைந்து செயல்படுகிறோம். வளர்ந்துவரும் சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுதலின் இயல்பைக் கூட்டாகப் புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கவும் அந்தப் புரிதலுக்குப் பங்களிக்கவும் இது உதவுகிறது.

இதை எவ்வாறு செய்கிறோம்?

Searchசில் சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்த்தல்

Searchசில் சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்த்தல்


Google Search தகவல்களைக் கண்டறிவதை எளிதாக்குகிறது என்றாலும் Searchசில் சட்டவிரோதமான அல்லது சிறுவர்களைப் பாலியல்ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெறுவதை நாங்கள் விரும்புவதில்லை. சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கத்திற்கோ சிறாருக்குப் பாலியல் சார்ந்த பாதிப்பையோ ஆபத்தையோ ஏற்படுத்தக்கூடிய அல்லது அவர்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கத்திற்கோ வழிவகுக்கும் தேடல் முடிவுகளைக் காட்டாமலிருப்பது எங்கள் கொள்கையாகும். வளர்ந்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு எங்கள் அல்காரிதங்களைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்து வருகிறோம்.

CSAM உள்ளடக்கத்தைப் பெற முயலுகிறவையாக நாங்கள் புரிந்துகொள்ளும் தேடல்களில் கூடுதல் பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறோம். CSAM உள்ளடக்கத்தைப் பெற முயலும் தேடல் வினவலாக இருப்பதாகத் தோன்றினால் வெளிப்படையான பாலியல் சார்ந்த முடிவுகளை வடிகட்டிவிடுகிறோம். வயதுவந்தோருக்கான வெளிப்படையான உள்ளடக்கத்தைப் பெற முயலும் வினவல்களாக இருந்தால் சிறுவர்களையும் பாலியல் உள்ளடக்கத்தையும் தொடர்புபடுத்துவதைத் தடுப்பதற்காக, சிறுவர்களைக் கொண்டிருக்கும் பட உள்ளடக்கங்களை Search முடிவுகள் காட்டாது. பல நாடுகளில், தெளிவாக CSAM தொடர்புடைய வினவல்களை உள்ளிடும் பயனர்களுக்குச் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்தவை சட்டவிரோதமானவை எனும் நன்றாகத் தெரியும்படியான எச்சரிக்கை காட்டப்படுகிறது. யுனைடெட் கிங்டமிலுள்ள இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன், கனடியன் சென்ட்டர் ஃபார் சைல்டு புரொடெக்‌ஷன் மற்றும் கொலம்பியாவிலுள்ள Te Protejo ஆகிய நம்பகமான அமைப்புகளுக்கு அந்த உள்ளடக்கத்தை எவ்வாறு புகாரளிப்பது என்கிற விவரமும் அதில் இருக்கும். இந்த எச்சரிக்கைகள் காட்டப்படும்போது இதுபோன்ற உள்ளடக்கத்தைத் தேடுவதைப் பயனர் தொடர்வது குறையும்.

முறைகேடான வீடியோக்களையும் உள்ளடக்கங்களையும் தடுப்பதற்கான YouTubeன் பணிகள்

முறைகேடான வீடியோக்களையும் உள்ளடக்கங்களையும் தடுப்பதற்கான YouTubeன் பணிகள்


YouTubeல் சிறுவர்களைப் பாலியல்ரீதியாகக் காட்டுகிற அல்லது தவறாகப் பயன்படுத்துகிற வீடியோக்கள், பிளேலிஸ்ட்கள், சிறுபடங்கள், கருத்துகள் ஆகியவற்றுக்கு எதிரான தெளிவான கொள்கைகளையே நாங்கள் எப்போதும் கொண்டுள்ளோம். இந்தக் கொள்கைகள் மீறப்படும்போது அவற்றை முனைப்புடன் கண்டறிய மெஷின் லேர்னிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துகிறோம். பயனர்கள் மற்றும் நம்பகமான புகாரளிப்பாளர்களால் கொடியிடப்பட்ட அல்லது எங்கள் சிஸ்டங்களால் கண்டறியப்பட்ட மீறல்களை உடனுக்குடன் அகற்றுகிற மதிப்பாய்வாளர்களையும் உலகம் முழுவதும் கொண்டுள்ளோம்.

வயது வராதோரைக் கொண்டுள்ள சில உள்ளடக்கங்கள் எங்கள் கொள்கைகளை மீறவில்லை எனினும், வயது வராதோருக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்துகள் உள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவேதான் இந்தக் கொள்கைகளை அமல்படுத்தும்போது கூடுதல் எச்சரிக்கையுடனான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறோம். வயது வராதோருக்கு ஆபத்தான வீடியோக்களை முனைப்புடன் அடையாளம் காண எங்களது மெஷின் லேர்னிங் சிஸ்டங்கள் உதவுகின்றன. இதன் மூலம் நேரலை அம்சங்களைத் தடைசெய்தல், கருத்துகளை முடக்குதல், வீடியோ பரிந்துரைகளைக் கட்டுப்படுத்தல் போன்ற எங்கள் பாதுகாப்பு சிஸ்டங்களைப் பெரிய அளவில் பயன்படுத்த முடியும்.

எங்களது CSAM வெளிப்படைத்தன்மை அறிக்கை

எங்களது CSAM வெளிப்படைத்தன்மை அறிக்கை


ஆன்லைன் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை எதிர்ப்பதற்கு Googleளின் முயற்சிகள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கையை 2021ம் ஆண்டு வெளியிட்டோம், அதில் NCMECயிடம் எத்தனை முறை புகாரளித்தோம் என்பதை விளக்கியுள்ளோம். YouTubeல் எங்களின் முயற்சிகள் குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Searchசில் இருந்து CSAM முடிவுகளை எவ்வாறு கண்டறிந்து அகற்றுகிறோம், எங்கள் சேவைகள் முழுவதிலும் CSAM மீறல்களுக்கு எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன என்கிற விவரமும் அதில் வழங்கப்பட்டிருக்கும்.

NCMEC உடன் நாங்கள் பகிரும் CSAM ஹேஷ்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இருக்கும். பிற பிளாட்ஃபார்ம்கள் CSAMமைப் பெரிய அளவில் அடையாளம் காண இந்த ஹேஷ்கள் உதவுகின்றன. NCMEC ஹேஷ் தரவுத்தளத்திற்குப் பங்களிப்பது நாங்களும் தொழில்துறையிலுள்ள மற்றவர்களும் CSAMமை எதிர்ப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும். ஏனெனில் இந்த உள்ளடக்கங்களை மீண்டும் பகிர்வதைக் குறைக்கவும், அதனுடன் தொடர்புடைய அம்சமான வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் பாதிப்புக்குள்ளாக்குவதைக் குறைக்கவும் இது உதவுகிறது.

எங்கள் தயாரிப்புகளில் தகாத உள்ளடக்கத்தைப் புகாரளித்தல்

எங்கள் தயாரிப்புகளில் தகாத உள்ளடக்கத்தைப் புகாரளித்தல்


எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் சிறுவர்களைத் தவறான எண்ணத்துடன் அணுகி, பாலியல் ரீதியான படங்களைக் காட்டி, மிரட்டி பணம் பறித்தல் அல்லது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல், கடத்தல் மற்றும் சிறாரைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிற முறைகள் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். எங்கள் தயாரிப்புகளைக் குழந்தைகள் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானதாக்கும் பணியின் பகுதியாக, தொடர்புடைய அதிகாரிகளிடம் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கம் குறித்துப் புகாரளிப்பதற்கான பயனுள்ள தகவல்களை வழங்குகிறோம்.

Gmail அல்லது Hangouts போன்ற Google தயாரிப்புகளில் சிறார் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனும் சந்தேகம் பயனர்களுக்கு ஏற்பட்டால், இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி அவர்கள் புகாரளிக்கலாம். பயனர்களால் உதவி மையம் மூலமும், தயாரிப்பிலேயே நேரடியாகவும் YouTubeல் தகாத உள்ளடக்கத்தைக் குறித்துக் கொடியிடவும், Google Meetல் தவறான பயன்பாட்டைப் குறித்துப் புகாரளிக்கவும் முடியும். சிறாரைப் பயனர்கள் நேரடியாகத் தொடர்புகொள்வதைத் தடுக்கும் வழிமுறை பற்றிய தகவல் உட்பட மிரட்டுதல், உபத்திரவம் ஆகியவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பவை பற்றிய தகவலையும் நாங்கள் வழங்குகிறோம். சிறார் பாதுகாப்பு தொடர்பான எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய YouTubeன் சமூக வழிகாட்டுதல்களையும் Google பாதுகாப்பு மையத்தையும் பாருங்கள்.

சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்ப்பதற்கான கருவிகளை உருவாக்கிப், பகிர்தல்

சிறுவர்களைப் பாதுகாக்கவும், மற்றவர்களும் அதையே செய்வதை ஆதரிக்கவும் எங்களுடைய தொழில்நுட்பத் திறனையும் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்துகிறோம். தகுதிபெறும் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைச் சிறப்பாக்கவும், விரைவாக்கவும், பாதுகாப்பானதாக்கவும் உதவுவதற்கென எங்களது மேம்பட்ட தொழில்நுட்பத்தை விலை இல்லாமல் வழங்கி ஆர்வமுள்ள நிறுவனங்கள் எங்களது சிறுவர் பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறோம்.

Content Safety API

இதுவரை ஒருபோதும் கண்டிராத CSAM உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கெனவும் அது CSAM என உறுதிசெய்யப்பட்டால் விரைவில் அகற்றவும் புகாரளிக்கவும் அதை முனைப்புடன் அடையாளம் காண எங்களை அனுமதிக்க மெஷின் லேர்னிங் வகைப்படுத்திகளில் பல ஆண்டுகளாக Google பணியாற்றி வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Content Safety API இயங்குகிறது. கொள்கைமீறும் உள்ளடக்கமாக மாறக்கூடியவற்றை மதிப்பாய்வு செய்வதற்கென நிறுவனங்கள் அவற்றை வகைப்படுத்தி முன்னுரிமை வழங்க இது உதவுகிறது. 2021ம் ஆண்டின் முதல் பாதியில், 600 கோடிக்கும் அதிகமான படங்களை வகைப்படுத்த Content Safety APIயை கூட்டாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிக்கலுக்குரிய உள்ளடக்கத்தை விரைவாகவும் அதிகத் துல்லியமாகவும் அடையாளப்படுத்தி அதிகாரிகளுக்கு அதைப் புகாரளிக்கவும் இது உதவுகிறது.

CSAI Match

2014ம் ஆண்டில், எங்களது சேவைகளில் இருந்து CSAMமாக அறியப்பட்ட வீடியோக்களைக் குறியிடவும் அகற்றவும் தேவையான தொழில்நுட்பத்தை YouTube பொறியாளர்கள் உருவாக்கிப் பயன்படுத்தினர். இந்தத் தொழில்நுட்பத்தை வீடியோக்களில் ஏற்கெனவே சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கமாக அடையாளம் காணப்பட்டவற்றைப் பல முறை பதிவேற்றுவதை அடையாளம் காண உதவும் CSAI Match API மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். கொள்கைமீறும் உள்ளடக்கமாக அறியப்பட்டவற்றின் எங்களது தரவுத்தளத்துடன் பொருந்துபவற்றை அடையாளம் காண NGOக்களும் நிறுவனங்களும் CSAI Matchசைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் உள்ளூர் சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்க அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.

கூட்டுகளும் & திட்டங்களும்

ஆன்லைனில் CSAM பகிரப்படுவதை இடையூறு செய்து சிறுவர்களைப் பாலியல் ரீதியாகப் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் NGOக்களையும் ஒன்று சேர்க்கிற பல கூட்டமைப்புகளில் செயல்பாட்டிலுள்ள உறுப்பினராக உள்ளோம். உதாரணமாக, டெக்னாலஜி கொலிஷன் (Technology Coalition), ICT கொலிஷன் (ICT Coalition), வீபுரொடெக்ட் குளோபல் அலையன்ஸ் (WeProtect Global Alliance), இன்ஹோப் (INHOPE), ஃபேர் பிளே அலையன்ஸ் (Fair Play Alliance) போன்றவை.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவித் தொகைகளை வழங்குகிறோம், வெளிப்படைத்தன்மை அறிக்கை குறித்த எங்கள் அவதானிப்புகள், தயாரிப்பிலேயே கண்டறிதல், இயக்கச் செயல்முறைகள் போன்ற கருவிகளையும் தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.

இணைந்து வழங்குவது:

Google.org மூலம் Ad Grants

Google.org மூலம் Ad Grants


சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தும் INHOPE, ECPAT இண்டர்னேஷனல் போன்ற அமைப்புகளுக்கு Google.org நிதியுதவி அளிக்கிறது. அத்துடன், 2003 இலிருந்து, Google.org ஏறக்குறைய $90 மில்லியனைச் சிறார் பாலியல் வன்கொடுமையைப் புகாரளிப்பதற்கான ஹாட்லைன் எண்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் NGOக்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு இலவச விளம்பரங்களுக்கான நிதியாக வழங்கியுள்ளது. இது தேவை இருப்பவர்களுக்கு அந்த அமைப்புகள் உதவிக்கரம் நீட்ட உதவுகிறது.

Google Fellow திட்டம்

Google Fellow திட்டம்


NCMEC, தோர்ன் (Thorn) போன்ற சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்ப்பதற்காகவே உள்ள அமைப்புகளில் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உதவித் தொகைகளையும் அளிக்கிறோம். இத்துடன் சிறாருக்கு எதிரான குற்றங்கள் குறித்த கருத்தரங்கம், சிறார் பாலியல் முறைகேடுகளைப் பற்றிய தேசியச் சட்ட அமலாக்கப் பயிற்சி போன்ற மன்றங்களின் மூலமாக ஆன்லைனில் சிறாருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் Google பயிற்சியளிக்கிறது.